தனுஷை தாஜா பண்ணிய ரஜினியின் மனைவி!

இன்று தான் கபாலி-2 என்ற விஷயம் எல்லோருக்கும் தனுஷின் வாயிலாக தெரிய வந்துள்ளது இதற்கு இடையில் இந்த மாதிரியான தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளது.
அமலா பாலுக்கு வடசென்னை படத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டதால், தன்னுடைய பேச்சையும் மீறி கணவர் தனுஷ் இப்படி நடந்துகொண்டதால் ஐஸ்வர்யா இந்த விவகாரத்தை ரஜினியிடம் கொண்டு சென்றதாக தகவல்கள் வந்தன.தனுஷ் தயாரிப்பில் உருவான அம்மா கணக்கு திரைப்படத்தில் அமலா பால் நடிக்கும் போதே அமலா பால், இயக்குனர் விஜய் உறவில் விரிசல் ஏற்பட்டு தற்போது விவாகரத்து வரை சென்றுவிட்டது. இந்த விரிசலுக்கு நடிகர் தனுஷும் காரணம் என கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் இயகுனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், விஜய் சேதுபதி, அமலா பால், ஆண்ட்ரியா ஆகியோர் வட சென்னை என்ற படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் அமலா பாலுக்கு வாய்ப்பு வழங்க கூடாது என தனுஷின் மனைவியும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா கூறியதாக பேசப்பட்டது.
ஆனால் மனைவி ஐஸ்வர்யாவின் பேச்சையும் மீறி தனுஷ் அமலா பாலுக்கு வாய்ப்பு அளித்தார். இதனால் ஐஸ்வர்யா இந்த பஞ்சாயத்தை அவரது தந்தை ரஜினிகாந்திடம் கொண்டு சென்றதாகவும் பேசப்பட்டது.
இந்நிலையில், தென்னிந்தியாவின் பெண்கள் நல ஐநா தூதராக ஐஸ்வர்யா தனுஷ் நியமிக்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்வில் கணவர் தனுஷ் உடன் பங்கேற்க விரும்பினார் ஐஸ்வர்யா.
அமலா பால் விவகாரத்தை ரஜினியிடம் கொண்டு சென்றதால் தனுஷ் ஐஸ்வர்யா மீது கோபத்தில் இருந்துள்ளார். ஆனால் ரஜினியின் மனைவி லதா தான் தனுஷ்-ஐ சமாதனப்படுத்தி விழாவிற்கு அழைத்து வந்துள்ளார். விழாவில் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் தனுஷ், மாமியார் மேல் கை போடு போஸ் கொடுத்தார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
