Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

'தடம்' படத்தின் படப்பிடிப்பை தொடங்கி வைத்த இயக்குனர் ஹரி...

On June 20, 2017
thadam_3177022f
Share
thadam_3177022f 'குற்றம் 23' படத்தைத் தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் அருண் விஜய். 'தடம்' என பெயரிடப்பட்ட இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்தர்குமார் தயாரிக்கவுள்ள இப்படத்தில் 2 நாயகிகள் நடிக்கவுள்ளனர். இதற்கான தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னையில் ஜூன் 19-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படப்பூஜையுடன் தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பை இயக்குநர் ஹரி தொடங்கிவைத்தார். அதிக பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தில் அருண்விஜய் 2 வேடங்களில் நடிக்கவுள்ளார் . பெப்சி விஜயன் மற்றும் மீரா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.