டெல்லியில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: சாமியார் கைது!

தலை நகர் டெல்லி அருகே உள்ள ஜெய்த்பூர் பகுதியில் குடிசை ஒன்றில் வசித்து வருகிறார் டோங்கி பாபா என்பவர். இவர் தன்னை சாமியார் என கூறிக்கொண்டு பூஜைகள் செய்து வந்தார். இதனால் அருகில் உள்ளவர்கள் இவரை நம்பி அவரது குடிசைக்கு சென்று பூஜையில் கலந்துகொண்டு வந்தனர். இதில் ஒரு பெண் தனது 10 வயது மகளுடன் அடிக்கடி சாமியாரின் பூஜைக்கு சென்று வந்துள்ளார். அப்போது அந்த சாமியார் அந்த 10 வயது சிறுமியை தனியாக அழைத்துக்கொண்டு போய் பாலியல் பலாத்காரம் செய்துவந்துள்ளார்.
கடந்த நான்கு, ஐந்து மாதங்களாக இந்த சாமியார் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவந்துள்ளார். வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டியும் உள்ளார் இவர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சிறுமி தனது தாயிடம் கூற அவர் உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சாமியாரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
