டாஸ்மாக் வழக்கு:தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு..!

1300 டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.
இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சென்னை ஐகோர்ட் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கு ஜூலை 23 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 1300 கடைகளையும் தனித்தனியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படியும் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
