ஜூன் 16, 17ல் மீண்டும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..

இந்தியாவில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு 5 கட்டங்களாக மீண்டும் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அப்படி ஒவ்வொரு முறை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கு முன்பும் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன், வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்தி வந்தார்.
இந்நிலையில் இப்போது மீண்டும் ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மீண்டும் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூன் 16ஆம் தேதி 3 மணி அளவில், பஞ்சாப், அசாம், கேரளா, உத்தரகண்ட், ஜார்கண்ட், சத்தீஸ்கர், திரிபுரா, இமாச்சலப் பிரதேஷ், சண்டிகர், கோவா, மணிப்பூர், நாகாலாந்து, லடாக், புதுச்சேரி, அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மிசோரம் , அந்தமான் &, நிகோபார், தாரா நகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ, சிக்கிம், லட்சத்தீவு ஆகிய மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
அடுத்த நாளான ஜூன் 17ஆம் தேதி, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களான, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா, பீகார், ஆந்திர பிரதேசம், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
