Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 11,458 பேருக்கு கொரோனா தொற்று..

On June 13, 2020
1
Share

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரம், தமிழ்நாடு, டில்லி ஆகிய 3 மாநிலங்களில்தான் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 11,458 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில் ,

நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 11,458 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,08,993-ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 386 பேர் உயிரிழந்தனா். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 8,884-ஆக உயா்ந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோரில் 1,45,779 பேர் சிகிச்சையில் உள்ளனா்.

1,54,330 போ நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தனா். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 10,000-க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று கண்டறியப்படுவது இது 2ஆவது முறையாகும். முன்னதாக நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 10,956 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.