Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சௌந்தர்யாவின் முதல் அசைன்மென்ட்டே ‘கத்தி’ தான்..!

On September 10, 2014
latest-kaththi-stills-2
Share

‘கோச்சடையான்’ படத்தின்போதே சௌந்தர்யாவின் தொழில்நுட்ப மற்றும் கிரியேட்டிவ் திறமையை பார்த்து வியந்த ஈராஸ் நிறுவனம் இப்போது சரியான தருணத்தில் அவருக்கு தங்களது நிறுவனத்தின் கிரியேட்டிவ் டைரக்டர் பதவியை வழங்கியுள்ளது.

கிரியேட்டிவ் டைரக்டர் ஆன கையோடு சௌந்தர்யா சக்சஸ் பண்ணியிருக்கும் முதல் அசைன்மென்ட்டே விஜய் நடித்துவரும் ‘கத்தி’ படத்தின் ஆடியோ ரைட்ஸை வாங்கியிருப்பதுதான்.. அதற்காக இதுவரை தமிழில் வெளியான எந்தப்படத்தின் ஆடியோவுக்கும் கொடுக்கப்படாத மிகப்பெரிய விலையை கொடுத்துள்ளதாம் ஈராஸ் மியூசிக். வரும் செப்டம்பர்-18 ஆம் தேதி இந்தப்படத்தின் ஆடியோ ரிலீசை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்திருக்கிறார்கள்.

ஒரு பக்கம் ‘கத்தி’ பிரச்சனையில் ஒருசிலர் பிரச்சனை பண்ணிக்கொண்டு இருந்தாலும் படம் சம்பந்தப்பட்ட வியாபார வேலைகள் என்னவோ அதுபாட்டுக்கு நடந்துகொண்டுதான் இருகின்றன. இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அதிலும் தற்போது “லெட்ஸ் மேக் எ செல்பி புள்ள..” என இந்தப்படத்தில் விஜய் பாடியிருக்கும் பாடல் ஏற்கனவே ஹிட் ஆகிவிட்டது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.