Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

“சிம்பு படம் ட்ராப் ஆகவில்லை” – கௌதம் மேனன்

On September 10, 2014
Simbu-gvm kudai
Share

தன்னை வைத்து ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்தவர் கௌதம் மேனன் என்பதாலும் அவ்வளவு பெரிய டைரக்டர் இக்கட்டான சூழலில் தன்னைத்தேடி வந்திருக்கும்போது தானும் அவரை கைவிடுவது நன்றாக இருக்காது எனவும் நினைத்த சிம்பு, கௌதம் படத்தில் நடிக்க ஓகே சொன்னார்.

ஆனால் 30 நாட்கள் ஷூட்டிங் முடிந்த நிலையில் அடுத்ததாக அஜித் படம் கைக்கு வரவே சிம்பு படத்தை கிடப்பில் போட்டுவிட்டு அதற்கு போய்விட்டார் கௌதம் மேனன். அப்போ அந்தப்படம் அவ்வளவுதானா என கேட்டால் யார் அப்படி சொன்னது என திருப்பி கேட்கிறார் கௌதம்.

“எனக்கு ஒரு இக்கட்டான நேரத்தில் கைகொடுத்தவர் சிம்பு. அவர் நடித்த படத்தை பாதியில் கைவிட்டுவிட்டோம் என்பதெல்லாம் ஒருசிலர் கிளப்பிவிடும் வதந்தி. அஜித்தின் படத்தை டிசம்பரில் ரிலீஸ் செய்ய பிளான் வைத்திருக்கிறோம். அது ரிலீசானதும் டிசம்பரிலேயே சிம்பு படத்தை ஆரம்பித்துவிடுவேன்” என்கிறார் கௌதம் மேனன்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.