சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை எதிர் கொள்கிறது இந்திய அணி!

இந்திய அணி 3 மாதத்தில் 23 போட்டியில் விளையாடுகிறது. இந்திய மண்ணில் வந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் விளையாடுகின்றன. இதில் மூன்று டெஸ்ட் போட்டிகள், 11 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 டி20 கிரிக்கெட் போட்டிகள் அடங்கும்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக செப்டம்பர் 17-ந்தேதி முதல் அக்டோபர் 11-ந்தேதி ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது.
முதல் போட்டி சென்னையில் நடக்கிறது. மற்ற நான்கு போட்டிகள் பெங்களூரு, நாக்பூர், இந்தூர், கொல்கத்தாவில் நடக்கிறது.
நியூசிலாந்துக்கு எதிராக அக்டோபர் 22-ந்தேதி முதல் நவம்பர் 7-ந்தேதி வரை மூன்று ஒருநாள் கிரிக்கெட்டிலும், மூன்று டி20 கிரிக்கெட்டிலும் விளையாடுகிறது.
இலங்கைக்கு எதிராக நவம்பர் 15-ந்தேதி முதல் டிசம்பர் 24-ந்தேதி வரை மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது.
இந்த மூன்று நாடுகளுடன் விளையாடிய பிறகு இந்திய அணி தென்ஆப்பிரிக்கா செல்கிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
