Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சொகுசு கார் விவகாரம் சசிகலா கணவருக்கு ஜாமீன்!

On December 15, 2017
large_natarajan-husband-of-sasikala-34826
Share
large_natarajan-husband-of-sasikala-34826 சொகுசு கார் இறக்குமதி வழக்கில்  சசிகலா கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சிபிஐ முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கை எதிர்த்து நடராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கடந்த மாதம் 17ஆம் தேதி உயர்நீதிமன்றம் நடராஜனுக்கு அளித்த தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து நடராஜன் உடல்நலத்தை காரணம் காட்டி சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி மனுதாக்கல் செய்தார். அவரின் கோரிக்கை உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதால் சுப்ரீம் கோர்ட்டை நாடினார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், நடராஜனுக்கு சிறை செல்வதிலிருந்து தற்காலிமாக விலக்கு அளித்தது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவின் நகலை நடராஜன், சமர்பிக்காததால் கடந்த 7-ம் தேதி, சிபிஐ நடராஜனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனை எதிர்த்து நடராஜன் தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் நடராஜன் தரப்பினரை 25 லட்சம் ரூபாய்க்கு பிணைத்தொகை செலுத்தி, கோர்ட்டில் சரணடைந்து பின்னர் ஜாமீன் பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.