Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அரசியலில் இருந்து விலகுவது பற்றி மனம் திறந்தார்- காங்கிரஸ் தலைவர்!

On December 15, 2017
SONIA_GANDHI_1065193f
Share
SONIA_GANDHI_1065193f நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் கலந்துகொள்வதற்காக  காலை நாடாளுமன்றத்துக்கு வருகைதந்த சோனியா காந்தியிடம் செய்தியாளர் ஒருவர், “நீங்கள் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவராக தொடர்வீர்களா?” என்று கேள்வி எழுப்ப, “இனி நான் ஓய்வு பெறுவதே சரியான பங்களிப்பாக இருக்கும்” என சோனியா காந்தி கூறிச் சென்றார். நாளை காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்கவுள்ள நிலையில் சோனியா காந்தி இவ்வாறு கூறியிருப்பது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்தது. sonia அவர் மக்களவையில் இருந்து ஒதுங்கியிருப்பதை அப்படிக் கூறினாரா இல்லை ஒட்டுமொத்த அரசியலில் இருந்தே விலகியிருப்பதைக் கூறினாரா என்பது விளங்காமல் இருந்தது. இது தேசிய அளவில் ஒரு விவாதப் பொருளாகவே மாறியது.
இந்நிலையில், இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார்.
soniyag அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஊடக நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோளை முன்வைக்கிறேன். சோனியாவின் கருத்துகள் மீது எவ்விதமான மறைமுக தாக்கல்களுக்கும் இடம்தர வேண்டாம் என வேண்டுகிறேன். சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தே ஓய்வு பெற்றுள்ளாரே தவிர தீவிர அரசியலில் இருந்து அல்ல. காங்கிரஸ் கொள்கைகள் மீதான அவருடைய ஆழ்ந்த பிடிப்பும், ஞானமும் எங்களைத் தொடர்ந்து வழிநடத்தும். அவருடைய ஆசியுடன் நாங்கள் செயல்படுவோம்” எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் தலைவராக மிக அதிக காலம், (19 ஆண்டுகள்) பணியாற்றிய பெருமையை சோனியா காந்தி பெற்றுள்ளதால் அவருக்கு கட்சியின் கவுரவப் பதவி அளிக்க காங்கிரஸ் பரிசீலித்துவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.