Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

‘சைத்தான்’ படத்தின் சென்னை வசூல்

On December 5, 2016
main2
Share

main2விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன்' படம் தமிழகத்தில் மட்டுமின்றி தெலுங்கு மாநிலங்களிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால் அவருடைய அடுத்த படமான 'சைத்தான்' படத்திற்கு மூன்று மாநிலங்களிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் 'சைத்தான்' படத்திற்கு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் பாசிட்டிவ் ரிசல்ட், இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் அதிகரிக்க கைகொடுத்தது. கோலிவுட், டோலிவுட் என இரண்டு மாநிலங்களிலும் நல்ல ஒப்பனிங் வசூல் கொடுத்துள்ளது. இந்த படத்தின் சென்னை ஓப்பனிங் வசூலில் கடந்த வார இறுதி நாட்களில் (டிசம்பர் 1 முதல் 4 வரை) 19 திரையரங்குகளில் 246 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,44,38,220 வசூல் செய்துள்ளது. ரூபாய் நோட்டு பிரச்சனையிலும் திரையரங்குகளில் 90% பார்வையாளர்கள் குவிந்திருந்தனர். விஜய் ஆண்டனியின் முந்தைய படங்களை ஒப்பிடும்போது இந்த படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.