Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சைகொலாஜிகள் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் 'பிரகாமியம்'

On January 10, 2017
thumbnail_img_0058
Share
thumbnail_img_0058இயக்குனர் பிரதாப் என்பவர் இயக்கி நடிக்கும் படம் 'பிரகாமியம்'. இப்படம் காதல், அக்ஷன், சென்டிமென்ட் கலந்த சைகொலாஜிகள் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். ஆனால் பாடல்களும் காதல் காட்சிகளும் இல்லாத ஒரு ஆழ்மன உலகத்தில் நிகழும் காதல் கதையை சொலலும் படமாக உருவாகியுள்ளது. தந்தை மகனிடையே நிகழும் சம்பவங்கள் உலக அரசாங்களுக்கும் மக்களுக்கும் நிகழும் சம்பவங்களாக சம்பந்தபடுத்தி கருத்து  சொல்லும் படமாக உருவாகியுள்ளது. இப்படம் ஒரு மனநிலை பதிக்கப்பட்ட ஒரு நபரின் ஆழ்மன உலகத்தை படம் எடுத்து காட்டும் படம். இது ஒரு கலை  படம்  + ஆவன படம்  + கமர்ஷியல் படம் , அப்படியாக மூன்று வகையான கதை சொல்லும் யுத்திகளின் கலவையாக உருவகியுள்ள இப்படம் படம் Art - doccial  படமாக உருவாகி உள்ளது .  இதில் ரோப் காட்சிகள் , கார் சேஸ்  போன்ற ஆக்சன்  காட்சிகள் இல்லாத ஒரு Psychological action thriller movie. எந்தவித கவர்ச்சியோ, இரட்டை அர்த்தம் வசனங்களோ இல்லாத படம் இது. ஆனால் படத்திற்கு சென்சாரில் “A” சான்றிதழ் கொடுத்தர்க்கான காரணமாக இயக்குனருக்கு சொல்லப்பட்டது என்னவென்றால் “இப்படம் அதிக தாக்கத்தை உளவியல் ரீதியாக திரைக்கதை மூலம் மக்கள் மனதில் ஏற்படுத்தும் என்பதற்காக” என்பது தான். வருகிற ஜனவரி 20ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தை பிரதாப் இயக்கி இரெட்டை வேடத்தில் நடித்துள்ளார்.  ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.