சேலம் குக்கிராமத்தில் தேனீர் அருந்திய முதல்வர் !

சேலத்தில் சமுத்திரம் என்ற குக்கிராமத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேனீர் அருந்தினார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியம், சமுத்திரம் என்ற குக்கிராமத்தில், புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.
அதன் பின்பு, அந்தக் குக்கிராமத்தில் உள்ள அம்பாள் தேனீர் கடைக்குச் சென்று தேனீர் அருந்தினார். அப்போது அந்தக் கடை உரிமையாளரிடம், இந்த கிராமத்தில் தேனீர் வியாபாரம் எவ்வாறு நடைபெறுகிறது என்று கேட்டறிந்தார். தேனீர் அருந்திய பின்பு அதற்கான தொகையை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடை உரிமையாளரிடம் வழங்கினார்.
மேலும், தேனீர் மிகவும் நன்றாக இருந்ததென்று தெரிவித்ததோடு அந்தக் கடை உரிமையாளரையும் பாராட்டினார். இந்த நிகழ்வின்போது மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
