கல்லூரிக்கு சர்ப்ரைஸ் விசிட்-தல அஜித்..!

நேற்று சென்னையிலுள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜிக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார் அஜித்.
நடிக்க வருவதற்கு முன்பு மெக்கானிக்காக இருந்தவர் அஜித். பைக் மற்றும் கார் தொடர்பான அத்தனை விஷயங்களும் அவருக்கு அத்துப்படி. பைக், கார் பற்றிய லேட்டஸ்ட் விஷயங்களைக் கூட அப்டேட்டாக வைத்துக் கொள்வார்.
பைக், கார் மட்டுமின்றி, விமானம் பற்றியும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அஜித்துக்கு ஏற்பட்டிருக்கிறது. ‘குவாட்காப்டர்’ பற்றித் தெரிந்து கொள்வதற்காக, குரோம்பேட்டையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜிக்கு சமீபத்தில் விசிட் அடித்துள்ளார்.
அஜித் வரும் தகவல் மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தும், எப்படியோ சில மாணவர்களுக்கு மட்டும் விஷயம் தெரிந்துவிட்டது. எனவே, 6 மணி நேரம் காத்திருந்து அஜித்துடன் புகைப்படம் எடுத்துள்ளனர். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
