Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

செல்ஃபி மோகத்தால் கை குழந்தை பலி !

On May 15, 2018
chaild
Share

ராஜஸ்தானின் மாநிலம் கங்காநகரில் உள்ளது சிஜிஆர் மால். இந்த தனியாருக்கு சொந்தமான மால் ஒன்றுக்கு  பெண் ஒருவர் தன் பத்து மாதக் கைக்குழந்தை மற்றும் கணவருடன் சென்றுள்ளார். அங்கு மூன்றாவது மாடிக்குச் செல்ல எஸ்கலேட்டரின் உதவியை நாடியுள்ளார். அப்போது அந்தப் பெண்ணின் கணவர் எஸ்கலேட்டர் இயக்கத்தில் இருக்கும் சமயத்தில் ஒரு செல்ஃபி எடுக்குமாறு அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார்.

அப்போது, அந்த பெண் செல்ஃபி எடுக்க முயன்ற போது அந்தப் பெண் கையிலிருந்த 10 மாதக் கைக்குழந்தை நிலை தடுமாறி எஸ்கலேட்டருக்கும் நடைபாதைக் கைபிடிக்கும் இடையே மோதிக் கீழ் தளத்தில் விழுந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அந்தக் குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். அங்கு தரையில் மோதிய உடனேயே அந்தக் குழந்தையின் உயிறிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தற்போது போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதேபோல, நாளுக்கு நாள் செல்ஃபி மோகத்தால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.