Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை..!

On September 14, 2018
chennai_HC
Share

சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சேலம் 8 வழி பசுமைவழி சாலை திட்டம் சென்னையிலிருந்து காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்கள் வழியே அமைக்கப்படுகிறது. இதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன.அதேசமயம் இந்த திட்டத்தை எதிர்த்து வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 8 வழிச்சாலை திட்டத்துக்காக மரங்களை வெட்டக்கூடாது என எச்சரித்தனர். மரங்களை வெட்டாக்கூடாது என்ற உத்தரவை மீறும் வகையில் பட்டா நிலங்களை, சாலைக்குள் வரும் அரசு நிலங்களாக மாற்றினால் 8 வழி சாலை திட்டம் முழுமைக்கும் தடை விதிக்க நேரிடும் என்றனர். இதுதொடர்பாக அரசு சார்பில் அறிக்கை தக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இத் திட்டத்தை மேற்கொள்வது தொடர்பாக சுற்றுச்சூழல் அனுமதியை பெறாத நிலையில் , மரங்களை மத்திய அரசு சார்பில் வெட்டவில்லை என்றும் தனிநபர்கள் அரசின் பெயரை பயன்படுத்தி இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மரங்களை வெட்டிய புகாரில் சில நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில், வனத்துறை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், நிலம் கையகப்படுத்தும் பணி 2 வார காலத்திற்கு நிறுத்தி வைக்கப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து ள்ளது. திட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக மத்திய அரசு பரிசீலித்து வருவதால் இது போன்ற முடிவு எடுக்கப்பட்டு ள்ளதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய அரசின் அறிக்கையில் முரண்பாடு இருப்பதாகக் கூறி சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை தடை நீடிக்கும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.