Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சென்னை சில்க்ஸ் தீ விபத்துக்குள்ளாகியது...

On May 31, 2017
thee nagar
Share
thee nagar சென்னையில் இன்னைக்கு காலையில் பரபரப்பு ஏற்பட்டது. நம்ம சென்னையில் பிரபல கடையில் தீ விபத்து ஏற்பட்டது. அத பத்தி வாங்க என்னனு தெரிஞ்சிப்போம். சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் தொடர்ந்து 7 மணி நேரத்திற்கும் மேலாக தீப்பற்றி எரிந்து வருகிறது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அடித்தளத்தில் ஏற்பட்ட தீ தொடர்ந்து மேல் தளங்களுக்கும் பரவி வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுகிறது. தீயணைப்பு வீரர்களே உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இப்பகுதி அபாயகரமான பகுதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தீ எரிந்து வரும் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தீ 7 மாடிகளுக்கும் பரவி உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி அப்பகுதியில் இருந்து அனைவரையும் போலீசார் வெளியேற்றி வருகின்றனர். தடுப்புக்கள் அமைத்து வாகனங்கள் அப்பகுதிக்கு வராமல் தடுக்கப்பட்டு வருகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.