Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இன்று தான் கடைசி நாள்...

On May 31, 2017
anna-university
Share
anna-university தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் இன்றுடன் முடிவடைகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து மே 1-ஆம் தேதி முதல் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. மே 1-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஜூன் 3-ஆம் தேதிக்குள் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்பிக்க வேண்டும். இதுவரையில் சுமார் 1.50 லட்சம் பேர் வரை பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். தமிழகம் முழுவதும் 517 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. மொத்தம் 2 லட்சம் பொறியியல் படிப்புக்கான இடங்கள் உள்ளன. இந்த கல்லூரிகளுக்கான இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த கலந்தாய்வு ஒற்றைச் சாளர முறையில் நடைபெறும்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.