சென்னை அணியில் அஷ்வின் - கேப்டன் தோனி நம்பிக்கை

இந்த ஆண்டு முதல் மீண்டும் சென்னை அணி, களமிறங்குகிறது. கேப்டன் தோனி, துணைக் கேப்டன் ரெய்னா ஜடேஜா என, மூன்று பேர், அணியில் தக்க வைக்கப்பட்டனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஷ்வின், ஏலத்துக்கு சென்றார். இதுகுறித்து கேப்டன் தோனி கூறியது: ஐ.பி.எல்., தொடரில் தங்கள் அணிக்கு வந்து விடுமாறு பலர் என்னை அணுகினர்.
இருபினும் சென்னை எனது இரண்டாவது தாய் வீடு போன்றது. இங்குள்ள ரசிகர்கள் என்னை முழுமையாக ஏற்றுக் கொண்டனர். அவர்களில் ஒருவராக என்னை பார்க்கின்றனர். இதை விட பெரிய மகிழ்ச்சி வேறு ஒன்றும் இல்லை.
இதனால், வரும் 27, 28ல் நடக்கும் ஏலத்தில், உள்ளூர் வீரரான அஷ்வினை, எப்படியும் அணிக்கு கொண்டு வர முயற்சிப்போம். ஏலத்தில் இவர் தான் எங்கள் முதல் தேர்வாக இருப்பார். ஏனெனில், சென்னை அணியில் அதிகமான உள்ளூர் வீரர்கள் இடம் பெற வேண்டும் என, விரும்புகிறோம். சென்னை அணியின் மிகப்பெரிய பலம் ரசிகர்கள் தான்.
எப்போது இங்கு வந்தாலும் சென்னை அணிக்கு அதிக ஆதரவு கிடைக்கும். கடந்த இரு ஆண்டுகளாக ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கவில்லை என்ற போதிலும், சென்னை அணிக்கு ரசிகர்கள் ஆதரவு அதிகரித்து தான் உள்ளது. இவ்வாறு தோனி கூறினார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
