சூர்யாவின் அடுத்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது!

'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்குப் பிறகு சூர்யா நடிக்கவிருக்கும் படத்தை செல்வராகவன் இயக்கவிருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'சிங்கம் 3' படத்துக்குப் பிறகு, தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் பிஸியாக நடித்துவருகிறார் நடிகர் சூர்யா. முதல் முறையாக கீர்த்தி சுரேஷூடன் ஜோடி சேர்ந்திருக்கும் சூர்யாவை திரையில் பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்தப் படம் பொங்கல் ரிலீஸுக்கு காத்திருக்கிறது.
'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் செம மாஸ் லுக்கோடு களமிறங்கியிருக்கிறார் சூர்யா. அனிருத் இசையில், 'சொடக்கு' பாடல் தெறிக்கிறது. அதனால், பொங்கலுக்கு ரிலீஸாகும் இந்தப் படத்தை சூர்யா ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்து வருகிறார்கள். அடுத்த படம் எது என ரொம்ப நாட்களாகவே கேட்டு வருகிறார்கள் அவரது ரசிகர்கள். இந்நிலையில், சூர்யாவின் அடுத்த படத்தின் அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருக்கிறது. ஜனவரியில் ஷூட்டிங் தொடங்கும் இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தத் தகவலை ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் செல்வராகவன்தான் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கப்போகிறார். இதற்கான அறிவிப்பை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இது இருவரும் இணையும் முதல் படமாகும். படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் பற்றிய மேலும் தகவல்கள் விரைவில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பொங்கலும் தீபாவளியும் வரும் பொங்கலுக்கு 'தானா சேர்ந்த கூட்டம்' படம் ரிலீசாக இருக்கும் நிலையில், தீபாவளிக்கு அடுத்த படம் ரிலீஸாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், 'போடு தகிட தகிட... அடுத்த வருஷம் பொங்கலும் தீபாவளியும் தெறிக்க விடுறோம்' என ரசிகர்கள் உற்சாகமாகி வருகிறார்கள்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
