சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் பிரம்மாண்ட படைப்பாக வரும் அரண்மனை-3

'அவ்னி சினிமேக்ஸ்' நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரிக்கும் படம் "அரண்மனை 3". இதில் ஆர்யா, ராசி கண்ணா மற்றும் சுந்தர் சி முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அரண்மனை 1 மற்றும் 2 ஆம் பாகங்கள் வெற்றிநடை போட்டது. அதன் பிரதிபலிப்பாக 3 ஆம் பாகம் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.
இப்படத்தில் விவேக், யோகிபாபு, மனோபாலா, ஆண்ட்ரியா, மதுசூதன் ராவ், வின்சென்ட் அசோகன், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இயக்குனர் சுந்தர் C படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும். அதுவும் குறிப்பாக அரண்மனை சீரீஸ் படங்களில் மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது .
அரண்மனை சீரீஸ் படங்களில் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் மனதை உருக்கும் வகையில் இடம்பெற்றிருக்கும். 'அரண்மனை 3' படத்தில் இடம்பெற்றிருக்கும் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் முந்தைய இரண்டு படங்களை விட மிகவும் உருக்கமாகவும் தாய்மார்கள் கண்ணீர் சிந்துவது போலவும் அமைந்துள்ளதாம்.
'அரண்மனை 1 மற்றும் 2' படங்களில் வரும் கதாநாயகர்களை விட 'அரண்மனை 3' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ஆர்யாவின் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
ஆர்யாவில் சினிமா கேரியரில் அரண்மனை 3 ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அரண்மனை 3 படத்தில் யோகிபாபு மற்றும் விவேக் காம்பினேஷனில் நகைச்சுவை காட்சிகள் பட்டையை கிளப்பியுள்ளதாக படம் பார்த்த சிலர் சொல்கின்றனர். ஆக தியேட்டரில் ரசிகர்கள் வயிறு குலுங்க சிரித்து சிதரப்போவது உறுதியாகியுள்ளது.
பொதுவாக அரண்மனை சீரிஸ் படங்களில் இயக்குனர் சுந்தர் C ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அதே போல் இப்படத்திலும் பல மர்ம முடிச்சுக்களை அவிழ்த்து பல திருப்பங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாம்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
