Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இனிவரும் தலைமுறைக்கு பேர் சொல்லும் படமாக இப்படம் இருக்கும் - தனஞ்செயன்

On October 2, 2021
Pandriku Audio Stills
Share
“பன்றிக்கு நன்றி சொல்லி” திரைப்பட இசை வெளியீட்டு விழா! "சூது கவ்வும்" திரைப்படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க ப்ளாக் காமெடி ஜானரில், புதுமுகங்களின் உருவாக்கத்தில், அசத்தலான காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள படம் தான் “பன்றிக்கு நன்றி சொல்லி” திரைப்படம். 'Media works' தயாரித்துள்ள, இப்படத்தை 'Studio Green' சார்பில் KE ஞானவேல் ராஜா, 'ABI & ABI Pictures' சார்பில் அபினேஷ் இளங்கோவன் மற்றும் இயக்குநர் நலன் குமாரசாமி இணைந்து வழங்குகிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் திரை விருந்தினர்கள் பங்குகொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் பாலா அரன் பேசியதாவது, "இப்படம் டார்க் ஜானரில் ஒரு புது முயற்சியாக செய்துள்ளோம். 'மூடர்கூடம்', 'சூது கவ்வும்' படங்கள் தான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது. இப்படம் எடுக்கப்பட்ட முழு அனுபவமும் மிக சவாலானதாக இருந்தது. இந்தப்படம் இந்த மேடைக்கு வர கேபிள் சங்கர், நலன் குமாரசாமி, ஞானவேல் ராஜா ஆகியோர் தான் காரணம். அந்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறோம்" என்று பேசினார். தயாரிப்பாளர் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் செல்வராஜ் பேசுகையில், "நானும், பாலாவும் கல்லூரி தோழர்கள். படிக்கும் போது நானும் அவனும் இணைந்து இந்த படத்தை, பெரிய பட்ஜெட்டில், பெரிய நடிகர்கள் வைத்து செய்ய வேண்டும் என்று நினைத்தோம். பின் பல போராட்டங்களுக்கு பிறகு நாமே செய்யலாம் என இறங்கி செய்தோம். இந்தப்படம் நாங்கள் இந்த மேடைக்கு வரும் என நினைக்கவில்லை, ஆனால் இப்போது இது பெரிய அளவில் ரிலீஸாவது மகிழ்ச்சி. இப்படத்தை இந்த அளவு பெரிய அளவில் வெளியிட காரணமாக இருந்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி" என்று பேசினார். நடிகர் நிஷாந்த் பேசியதாவது, "இந்தப்படத்தில் வர விஜயன் தான் காரணம், அவனால் தான் இந்தப்படம் எனக்கு கிடைத்தது. இயக்குநர் பாலா ஒரு இயக்குநராக இல்லாமல் அனைத்து துறைகளிலும் வேலை செய்திருக்கிறார். இங்கு இருக்கும் அனைவருமே எல்லார் வேலையையும் கலந்து, இணைந்தே செய்தோம். இப்படத்திற்காக இவ்வளவு பெரிய மேடையை பார்ப்போம் என யாரும் நினைக்கவில்லை. இதற்கு உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி" என்று நன்றி தெரிவித்தார். இயக்குநர் கல்யாண் பேசியதாவது, "இந்தப்படம் டிரெய்லர் நன்றாக இருந்தது, இந்தப்படம் சேர வேண்டிய இடத்தை சேர்ந்ததால் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும். நலன் குமாரசாமி ஒரு படத்தை தேர்வு செய்தால் நன்றாக இருக்கும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்றார். இயக்குநர் நலன் குமாரசாமி கூறும்போது, "2 வருஷம் முன்னாடி டிரெய்லர் மட்டும் காட்டினார்கள். அப்போது பெரிதாக அவர்களுக்கு என்னால் உதவ முடியவில்லை, இந்தப்படத்தை ரிலீஸ் செய்யும் ஞானவேல் சாருக்கு நன்றி. நாங்கள் குறும்படத்தில் செய்ததை முழு நீளப்ப்படமாக செய்யும் டெக்னாலஜி இப்போது வந்திருக்கிறது. ஆனால் இம்மாதிரி புதிய முயற்சியில் வெளியாகும் படங்கள் சரியான அறிமுகத்தை பெற வேண்டும் அம்மாதிரியான அறிமுகத்தை இப்படம் பெற்றது மகிழ்ச்சி" என்று கூறினார். தயாரிப்பாளர் KE ஞானவேல் ராஜா, பேசுகையில், "8 வருஷம் முன்னால் நடந்த அட்டகத்தி வெளியீடு போலவே, இந்த வெளியீடு அமைந்திருக்கிறது. அனைத்து இயக்குநர்களும் இங்கு வந்து இந்தப்படத்தை வாழ்த்தியுள்ளார்கள். இந்தப்படத்தில் அட்டாகசமாக உழைத்துள்ள அனைவரும், அட்டகத்தி படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இப்போது வளர்ந்திருப்பதை போல் மிகப்பெரிய அளவில் வளர்வார்கள். இந்தப்படம் முதலில் பார்க்கபோகும்போது வேறொருவர் வாங்கிவிட்டார்கள் என்றார்கள் பின்னர் எங்கெங்கோ சுற்றி என்னிடம் வந்தது, இந்தப்படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி. இந்த வகைப்படங்கள் எடுக்கும் அனைவருக்குமே உதாரணமாக இருப்பவர் நலன் தான்" என்றார். ABI & ABI Pictures சார்பில் நந்தினி அபினேஷ் பேசியதாவது,. "இந்தப்படத்தை எங்கள் நிறுவனத்தின் சார்பில் வெளிடுவது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் பணியாற்றியுள்ள அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். படம் மிகப்பெரிய வெற்றியை பெறும். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி" என்றார் . தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, "ஒரு மாதத்திற்கு முன் இப்படத்தை பார்த்து நிறைய ஆச்சர்யப்பட்டேன். இது ஒரு அசத்தாலான படம், ஓடிடிக்காக பார்த்த அனைவரும் இப்படத்தை பாராட்டினார்கள். 2 மணி நேரம் எப்படி போகிறதென்பதே தெரியாமல் விறுவிறுப்பாக இருக்கும். இந்தப்படம் விமர்சர்களுக்கும் ரசிகர்களுக்கும் பிடிக்கும் படமாக இப்படம் இருக்கும். இனிவரும் தலைமுறைக்கு பேர் சொல்லும் படமாக “பன்றிக்கு நன்றி சொல்லி” படம் இருக்கும். ஊடகங்கள் இப்படத்தை பெரிய அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் நன்றி" என்று பாராட்டி பேசினார். இப்படத்தைய் எழுதி இயக்கியவர் பாலா அரன். சுரேன் விகாஷ் இசையமைத்திருக்கிறார். பாபு எரிக் நடனம் அமைத்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.