சுசித்ரா கிளப்பிய சரவெடி அதிர்ந்த திரையுலகம்

அடுத்தது யாரோ என அரண்டு கிடக்குது திரையுலகம்.
கடந்த வாரத்தில் பாடகி சுசித்ரா தனுஷ், சின்மயி, திரிஷா, சிம்பு கும்பல் தன்னை தாக்கியதாக தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.
ரெடியோவில் ஆர்.ஜே வாக இருந்தவர் சுசித்ரா பின் படங்களில் பாடல்கள் பாடியதன் மூலம் பிரபலமானவர். நடிகர் கார்த்தியை கல்யாணம் பண்ணி செட்டிலானார். இவரை மாடல் ஷோக்கள் பார்ட்டிகளில் அதிகம் பார்க்கலாம் அப்படி கடந்த வாரம் நடந்த பார்ட்டியில் கலவரம் நடந்ததாகவும் கடந்த வாரத்தில் தனுஷ், சின்மயி, திரிஷா, சிம்பு கும்பல் தன்னை தாக்கியதாக தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.
இந்த விஷயம் திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து தனுஷ் மற்றும் பலர் பற்றி அவர் பல அதிர்ச்சி தகவல்களை பகிர்ந்து வந்தார்.
இதற்கு அவரது கணவர் தரப்பில் இருந்து சுசித்ரா டிவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இரண்டு நாட்கள் பிரச்சனை இல்லாமல் இருந்த நிலையில் நேற்று சுசித்ரா டிவிட்டர் பக்கத்தில் தனுஷ், திரிஷா நெருக்கமாக் இருக்கும் அந்தரங்க புகைப்படம், அனிருத், ஆண்ட்ரியா படம் , டிடி படம்
ஆகியவற்றை பகிர்ந்தார். அதைத் தொடர்ந்து நடிகைகள் அனுயா, சஞ்சிதா ஷெட்டி ஆகியோரின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.
இதனால் திரையுலகம் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எவரும் இதுவரை விளக்கமளிக்கவில்லை. மேலும் அவர் செல்வா, தனுஷ், ஆண்ட்ரியா வின் லீலைகளை வெளியிடுவேன் என்றும் சின்மயி,அனிருத் மற்றும் தனுஷ், அமலா வீடியோ வெளியாகும் என அவரது பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது அக்கவுண்ட் உண்மையில் ஹேக் செய்யப்பட்டத? இதைச் செய்வது யார் எனத் தெரியாமல் குழம்பிக்கிடக்கிறது திரையுலகம். இதைப்பற்றி சுசித்ராவை தொடர்பு கொண்டு கேட்டபோது தனது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்றும் தான் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். அவர் நேரில் வந்து மீடியாவைச் சந்தித்து விளக்கமளித்தால் மட்டுமே நடந்தது என்ன என்கிற உணமை தெரியும். Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postஅஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்
Next Postயாக்கை - விமர்சனம்
