Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்

On March 4, 2017
maxresdefault (1)
Share
maxresdefault (1) சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மிக முக்கியமான இடத்தை பிடித்தவர். இவருக்கு முன்னால் வந்த ஹீரோக்களின் அடித்து நொறுக்கி வசூலில் தான் தான் டாப் என நிரூபித்துள்ளார். தனுஷால் சிம்புவால் சாதிக்காத முடியாத அஜித், விஜய்க்கு அடுத்த இடத்தை பிடித்து விட்டார் இப்போது அஜித்துடன் போட்டி போட தைரியமாக களம் இறங்கியிருக்கிறார். ரெமோ படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், ‘தனி ஒருவன்’ ராஜா இயக்கும் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் பிரபல மலையாள ஸ்டார் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும் சினேகா, ஆர்.ஜே. பாலாஜி, சதீஷ், தம்பி இராமையா, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தில் சிவகார்த்திகேயன், சேரியை சேர்ந்த இளைஞராக நடிக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி விநாயகர் சதுர்த்தியில் வெளியாகும் என ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அஜித் நடித்துவரும் விவேகம் படமும் அதேநாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தேதியை மாற்றாமல் அதேநாளில் தனது படத்தை வெளியிட சிவகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளாராம். அஜித்துக்கு தமிழ் சினிமாவில் இருக்கும் ஓபனிங்கும், ரசிகர் பட்டாளமும் அனைவரும் அறிந்த விஷயம். எல்லாம் தெரிந்தும் சிவ கார்த்திகேயன் எடுத்திருக்கும் முடிவு பலரது புருவத்தை தூக்கியிருக்கிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.