Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சீ.வி.குமார் தயாரிக்கும் 'ஜாங்கோ' படப்பிடிப்பு துவங்கியது..!

On August 29, 2018
Jango (24)
Share
தமிழ் சினிமாவிற்கு புதிய அத்தியாயங்களாக இன்று விளங்கும் பல இயக்குநர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சீ.வி.குமார் திருக்குமரன் எண்ட்டர்டெயின்மெண்ட் சார்பாக 'ஜாங்கோ' எனும் புதிய படத்தை தயாரிக்கின்றார். சதிஷ் என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மிர்னாலினி கதாநாயகியாக நடிக்கின்றார். இவர்களுடன் கருணாகரன், ராம்தாஸ், R.J.ரமேஷ், ஹரிஷ் பெராடி, துளிசி, சந்தான பாரதி, சிவாஜி, கஜராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தயாரிப்பு - சீ.வி.குமார் (திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்), இணை தயாரிப்பு - சுரேந்திரன் ரவி, இயக்கம் - மனோ கார்த்திக்கேயன், ஒளிப்பதிவு - கார்த்திக் K தில்லை, இசை - நிவாஸ் பிரசன்னா, படத் தொகுப்பு - ராதாகிருஷ்ணன் தனபால், கலை - இயக்கம் - கோபி ஆனந்த், காஸ்ட்யும் டிசைனர் - மீனாக்ஷி ஷ்ரிதரன், சண்டை பயிற்சி - ஹரி திணேஷ், புரொட்கஷன் கண்ட்ரோலர் - சின்னமனூர் K.சதிஷ் குமார், போஸ்டர் டிசைன் - வின்சி ராஜ், எக்சிகியுடிவ் புரொடுயசர் - ஸ்ரீ சக்ரா .A, மக்கள் தொடர்பு - நிகில். இயக்குநர் அறிவழகனிடம் உதவி இயக்குநராகவும், 'முண்டாசுப்பட்டி' படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றிய மனோ கார்த்திக்கேயன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 'ஜாங்கோ' படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி தலைவரும், மஹாராஷ்ட்ரா நவ்நிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்ரேவின் நெருங்கிய நண்பருமான திரு. சதிஷ் குமார் போன்ஸ்லே கிளாப் அடித்து படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.