சிவாஜி சிலையில் கருணாநிதி பெயரா? நோ சான்ஸ்! -கடம்பூர் ராஜூ திட்டவட்டம்

 ,
நடிகர் சங்க பொதுக்குழுவில் சினிமாவிற்கு "மணிமண்டபம் கட்டிவிடாதீர்கள்" என விஷால் கூறியதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ "சினிமாத்துறையை பாதுகாப்பதே அதிமுக அரசுதான். இந்த 10-சதவிகித கேளிக்கை வரி விளக்கிக்கொள்ளப்படுவதற்கு வாய்ப்பே இல்லை" .என பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ தனியார் தொலைக்காட்சிக்கு அளித்தபேட்டியொன்றில் கூறியிருப்பதாவது,
அமைச்சர் கடம்பூர் ராஜூ தனியார் தொலைக்காட்சிக்கு அளித்தபேட்டியொன்றில் கூறியிருப்பதாவது,
- அதிமுக அரசு தான்சினிமாத்துறையை பாதுகாக்கும் அரசாக இருக்கிறது. வாட்வரி வந்த நேரத்தில் விலக்கு அளித்தவர் ஜெயலலிதா.
- 30-சதவீத கேளிக்கை வரி நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டநேரத்தில்திரைத்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதன் அடிப்படையிலேயே 10 சதவீதமாக குறைக்கப்பட்டது.
- முன்னர் நடைமுறையில் இருந்த கட்டணம்குறைவாக இருந்தால், மக்கள் அதிகவிலை கொடுத்துதான் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதனால் அவர்கள் கோரிக்கையின் அடிப்படையிலையே தற்போது நிர்ணயம் செய்திருக்கிறோம்.கோ
- திரையரங்க உரிமையாளர்கள்தான் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
- சில மாநிலங்கள் தவிர்த்து மற்ற மாநிலங்களில் கேளிக்கை வரி உள்ளது. அப்படி பார்த்தால்தமிழகம் தான் திரைத்துறைக்கு வரிவிலக்கு, மானியம்உட்பட பல்வேறு சலுகைளை வழங்கி வருகிறது. கே
- சிவாஜி மணிமண்டபத்தின்உள்ள சிவாஜி நிலையிலிருந்து அகற்றிய கருணாநிதியின்பெயரை மீண்டும்இடம்பெறச் செய்யவேண்டும்என்ற நடிகர்சங்கத்தின்கோரிக்கை நிச்சயம்ஏற்றுக் கொள்ளப்படாது. முன்னரே சரியான இடத்தில்வைக்காமல் அகற்ற காரணமாக இருந்ததே திமுக அரசு தான்”என்றார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
