சிவகார்த்திகேயன் படத்தில் ‘சன்னி லியோனா’?

சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை உயர்த்தியதில் இந்த படத்தின் பங்கு அபரிமிதமானது. தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் ஆக இருக்கிறது.
ஜெகபதி பாபு, ராகுல் ப்ரீத்சிங் ஜோடியாக நடிக்க இருக்கிறார்கள். இந்த படத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். அதாவது டீச்சர் வேடம். தமிழில் ‘பிந்து மாதவி’ நடித்த அந்த ஸ்கூல் டீச்சர் வேடத்தில் தான் சன்னி லியோன் நடிக்கிறார். தமிழில் ஒரு கெஸ்ட் ரோல் போல வந்த அந்த ரோல், தெலுங்கில் சன்னி லியோன் நடிப்பதால் மேலும் பல காட்சிகளை சேர்த்து கொஞ்சம் பெரிதாக்கியிருக்கிறார்கள் அந்த கதாபாத்திரத்தை.
இது மட்டுமில்லாமல் ஒரு குத்துப்பாடல் ஒன்றையும் ஸ்பெஷல் ஆக வைத்திருக்கிறார்கள் தெலுங்கு ரசிகர்களுக்காக. அந்த பாடல் சமீபத்தில் வந்த ‘வடகறி’ பாடல் மாதிரி இல்லாமல் விருந்து படைக்கும் பாடலாக இருக்குமாம்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postஇயக்குனர் ராம.நாராயணனுக்கு இறுதி அஞ்சலி
