Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அடுத்தடுத்து ரீமேக் படங்களில் நடிக்கும் ‘கமல்’

On June 24, 2014
kam
Share
kam புதுவித முயற்சிகளை தமிழ் சினிமாவில் புகுத்தும் கமல், அவ்வப்போது அவருக்கு பிடித்த ரீமேக் படங்களிலும் நடிப்பதுண்டு. கடைசியாக வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., ரீமேக் படத்தில் நடித்தார். படம் சூப்பர் ஹிட். அதன்பிறகு தற்போது மோகன்லால் நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம்’ மலையாள படத்தில் நடிக்க உள்ளார். தற்போது உத்தமவில்லனில் நடித்து வரும் கமல், ஜூலையில் இருந்து த்ரிஷ்யம் படத்தில் நடிக்க இருக்கிறார். இதனையடுத்து இன்னுமொரு ரீமேக் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம் கமல். ஆம். தெலுங்கில் சமீபத்தில் வெளியாகி சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் ‘மனம்’ படத்தைதான் ரீமேக் செய்ய இருக்கிறாராம். சமீபத்தில் ‘மனம்’ படத்தை பார்த்து ரசித்த கமல், நாகேஸ்வரராவின் நடிப்பு தன்னை வெகுவாக பாதித்ததாக குறிப்பிட்டிருந்தார். இதற்காக தனக்கு மிகவும் பிடித்த நடிகர் மாதவனை நாகர்ஜுனா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்துள்ளாராம். கமல் நாகேஷ்வர ராவ் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். நாக சைதன்யா கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு இளம் நடிகரை தேர்வு செய்துள்ளாராம். கமலுக்கு நெருக்கமான இயக்குனர் ஒருவர் இயக்குவார் என்று தெரிகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.