Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சங்கமித்ராவில் லேடி சூப்பர்ஸ்டார் நடிப்பார?...

On June 7, 2017
nayan2
Share
nayan2 சுந்தர் சி இயக்கத்தில் உருவாகவிருக்கும் வரலாற்று படம் தான் சங்கமித்ரா. இப்படம் 8ம் நூற்றாண்டை பின்னணியாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது. ரூ.250 கோடி பட்ஜெட்டில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கின்றனர். இதில், இளவரசியாக நடிக்க முதலில் ஸ்ருதிஹாசன் தேர்வு செய்யப்பட்டிருந்தார். மேலும், வாள் சண்டையும் கற்று வந்தார். இந்நிலையில், இப்படத்திலிருந்து அவர் விலகியதன் காரணமாக தற்போது அனுஷ்கா, நயன்தாரா மற்றும் ஹன்சிகா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது வேலைக்காரன், இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், அறம் ஆகிய படங்களில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தார பிஸியாக நடித்து வருகிறார். மற்ற நடிகைகளை விட நயனுக்குத் தான் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதுமடுமள்ளது இப்படத்தில் நடிப்பதற்கு நீத்து சந்திராவும் விருப்பம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.