Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கொசு மருந்து அடித்தார் நடிகர் ஆரி !

On August 7, 2017
ari
Share
ari நடிகர் ஆரி நேற்றைக்கு சென்னை அம்பத்தூர் வெங்கடாபுரம் குடிசைப் பகுதி பக்கம் கொசு மருந்து அடித்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. ’ஏதும் ஷூட்டிங்கா’ என விசாரித்தால் ஷூட்டிங் இல்லை என்பதும் நிஜமாகவே சமூகப் பணியில் அவர் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. "அர்பன் கிளப்", என்ற அமைப்பானது கொசுவை ஒழிக்கும் பொருட்டு, மாநகராட்சி மற்றும் தன்னார்வ இளைஞர்களின் துணையுடன் குடிசைப் பகுதியைச் சுற்றிலும் இந்தப் பணியை செயல்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில்தான் ஆரி கலந்துகொண்டிருந்தார். வளர்ந்து வரும் நடிகர் ஆரியை போல் பிரபலமாக உள்ள நடிகர் அனைவரும் சமூக நலப்பணிகளில் கலந்து கொண்டால் அவர்களின் ரசிகர்களும் தானாகவே சமூக நலப்பணிகளை முன்வந்து செய்வார்கள் என்பது குறிப்பிட தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.