Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

குணச்சித்திர நடிகர் சண்முகசுந்தரம் மறைவு!

On August 15, 2017
sanmugasundaram
Share
sanmugasundaram குணசித்திர நடிகர் சண்முகசுந்தரம் இன்று ஆகஸ்ட் 15 காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. கரகாட்டக்காரன், மவுனகீதம், தாவணி கனவுகள், உட்பட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். 100-க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்திருந்தாலும் கரகாட்டக்காரன் படத்தில் நடிகை கனகாவுக்கு தந்தையாக நடித்ததில் அவருக்கு நல்ல பெயரும் புகழும் கிடைத்தது. இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்நாதன், இளையராஜா ஆகியோரின் இசைக்குழுக்களில் பாடகராக இருந்துள்ளார். கடந்த சில காலமாகவே அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.