Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகர் விமல்!

On March 27, 2018
vimal
Share

தமிழ் சினிமாவில் "பசங்க" படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விமல். அடுத்து வந்த களவாணி படம் இவரை பெரிய அளவிற்கு உயர்த்தியது. பின்னர் வந்த படங்கள் ஓரளவு ஓடின. ஆனால் சமீபகாலத்தில் அவரது படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.

இந்நிலையில் "மன்னர் வகையறா" படம் மீண்டும் விமலை உச்சத்திற்கு உயர்த்தி உள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு நிலையான மார்க்கெட்டை பிடித்து விட்டார் விமல்.

இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இப்போது விமலின் மகன் நன்றாக வளர்ந்துவிட்டான். இதுவரை தன் மகனை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தாமல் இருந்த விமல் "மன்னர் வகையறா" வெற்றியை கொண்டாடும் விதமாக தன் மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.