“கார்த்திக் என்னை டேமேஜ் பண்ணிட்டார்” – தனுஷ் புலம்பல்..!

தனுஷ் நடிக்க கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள ‘அனேகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா அதிக ஆரவாரமின்றி பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதற்காக இந்தப்படத்தின் தயாரிப்பாளரான கல்பாத்தி அகோரம் வில்லிவாக்கத்தில் அமைந்துள்ள தனது ஏ.ஜி.எஸ் தியேட்டரையே ஒதுக்கியிருந்தார்.
இந்த விழாவில் தனுஷ், கதாநாயகி அமிரா தஸ்தூர், நவரச நாயகன் கார்த்திக், மற்றும் படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். விழாவில் தனுஷ் பேசும்போது, “முதல் நாள் ஷூட்டிங்கில் கார்த்திக் சாரை பார்த்து நான் மட்டுமல்ல, செட்டே வாய்பிளந்து பார்த்தது.
ஒரு ஆணை அப்படி பார்த்தோம் என்று சொல்ல எனக்கே கூச்சமாக இருக்கு.. ஆனால் அதுதான் உண்மை. அதேபோல டப்பிங் பேசும்போது அவரது அனுபவத்தில் நிறைய இடங்களில் சுவராஸ்யமாக ஏதாவது பேசி பில்லப் பண்ணி என்னை டேமேஜ் பண்ணிவிட்டார்” என்று ஜாலியாக புலம்பினார்..
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
