ஆனந்த்ராஜுக்கு பிரபுதேவா போட்ட உத்தரவு...!

முதன்முறையாக பாலிவுட்டில் என்ட்ரி ஆகியிருக்கிறார் வில்லன் நடிகர் ஆனந்த்ராஜ். அதுவும் பிரபுதேவா இயக்கியுள்ள ‘ஆக்ஷன் ஜாக்சன்’ படம் மூலமாக. ஏற்கனவே தமிழில் ‘போக்கிரி’ படத்தில் ஆனந்தராஜுக்கு நல்ல கேரக்டரை கொடுத்திருந்ததால், பிரபுதேவா அழைத்ததும் பாலிவுட்டுக்கு வர உடனே ஒப்புக்கொண்டார் ஆனந்த்ராஜ். இதிலும் இவருக்கு வில்லன் வேடம் தான்
ஆனால் ஆனந்தராஜுக்கு பிரபுதேவா போட்ட முதல் கண்டிஷன் படத்தில் நடிப்பதற்காக 15 கிலோ எடையை குறைக்கவேண்டும் என்பதுதான். கிட்டத்தட்ட ஒரு வருட தீவிர முயற்சிக்குப்பிறகு 12கிலோ எடையை குறைத்துள்ளார் ஆனந்த்ராஜ்.. அவரின் எடையை உறுதிசெய்து திருப்தியான பின்னரே படப்பிடிப்புக்கு அழைத்துச்சென்றாராம் பிரபுதேவா
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
