Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

காஞ்சிபுரத்தில் விளையாட்டு அரங்கம் : முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு...

On June 19, 2017
epsiuy_3171222f
Share
epsiuy_3171222f 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி, பள்ளி கல்வித்துறைக்கான புதிய அறிவிப்புக்களை இன்று சட்டசபையில் வெளியிட்டார்.அவை, * உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.. இதற்காக ரூ.437 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. * பள்ளி கல்வி இயக்ககத்திற்கு ரூ.33 கோடி மதிப்பில் எம்.ஜி.ஆர்., பெயரில் கட்டடம். * எம்ஜிஆர் பெயரில் பள்ளிகளில் தனிக்கட்டடங்கள்* கிராமப்புற தொடக்க மற்றும் நடுத்தர 3090 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள். * 43 அரசு கல்லூரிகளில் எம்.ஜிஆர் பெயரில் கட்டடங்கள் கட்ட ரூ.210 கோடி ஒதுக்கீடு* பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.39 கோடி ஒதுக்கீடு * 2017- 2018ம் கல்வியாண்டில் 268 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும். இதற்காக 660 பேராசிரியர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும். * 7 அரசு கலை அறிவியல் கல்லூரிகள், 3 பல்கலை., உறுப்பு கல்லூரிகள் நடப்பாண்டில் தொடங்கப்படும். * காஞ்சிபுரத்தில் ரூ.15 கோடியில் விளையாட்டு அரங்கு அமைக்கப்படும். * நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., வளாகத்தில் ரூ.5 கோடி செலவில் நீச்சல்குளம் அமைக்கப்படும். பிற துறை அறிவிப்புக்கள் : * மாதவரத்தில் ரூ.25 கோடியில் புதிய சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும். * வனத்துறை பணியாளர்கள் பணியின் போது உயிரிழந்தால் இழப்பீடு தொகை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும். * கூட்டுறவு வங்கிகளில் சிறு வணிகக் கடன் ரூ.10,000லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்படும்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.