இன்னும் கழிவறையே இல்லதா 2 லட்சம் கிராமங்கள்...

மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின் அடிப்படையில், இதுவரை 25 சதவீதம் அதாவது ஏறக்குறைய 2 லட்சம் கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் இல்லை.2019 ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், திறந்த வெளியில் மலம் கழிப்பதை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அனைத்து வீடுகளிலும் கழிப்பறை அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.
குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் தொடர்பாக அனைத்து மாநிலங்களிடமும் மத்திய அரசு அறிக்கை கேட்டிருந்தது.இதன் மூலம் பெறப்பட்ட தகவல்களின்படி, 6,05,828 கிராமங்கள் திறந்த வெளியில் மலம் கழிக்காத கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதே சமயம் 2,00,959 கிராமங்களில், 52,593 கிராமங்கள் 100 சதவீதம் கழிப்பறை கொண்ட கிராமங்களின் பட்டியலில் இடம்பெறவில்லை.
இதற்காக அனைத்து மாநில அரசுகளும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
