காஜல் அகர்வால் மீது உதயநிதி புகார்..!

இது சரியா, தவறா? தவறு என்றால் யார்மீது என்பதையெல்லாம் செய்தியை முழுமையாக படித்தபின்னர் நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.. உதயநிதி தற்போது நயன்தாராவுடன் இணைந்து ‘நன்பேண்டா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் காஜல் அகர்வாலைத்தான் அணுகினார்கள். அவரும் சரியென்று சொல்ல ரூ.40 லட்சம் அட்வான்சும் கொடுத்துள்ளார்கள். இடையில் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. இந்தப்படத்திலும் நயன்தாராவே ஹீரோயிநாக நடிக்கட்டுமே என முடிவு செய்து நயனை வைத்து படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டார்கள்.
அதனால் காஜலிடம் கொடுத்த அட்வாசை திருப்பிக்க் கேட்க, அவரோ திருப்பி தரமுடியாது என்றும் வேண்டுமானால் அடுத்த படத்தில் நடிகும்போது கழித்துகொள்ளலாம் என கூறியுள்ளாராம். ஆனால் இதை ஏற்காத உதயநிதி, காஜல் அகர்வால் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளாராம். தவறு யார் மீது? நீங்களே யூகியுங்கள்
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
