காங்கிரஸ், திமுக கட்சிகளை தமிழக மக்கள் வேரோடு பிடுங்கி எறிவார்கள் - எச்.ராஜா அதிரடி..!

ஊழலின் பிறப்பிடமாக இருக்கும் காங்கிரஸ், திமுக கட்சிகளை தமிழக மக்கள் வேரோடு பிடுங்கி எறிவார்கள் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாகோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாஜகவின் மூத்த தலைவர்கள் 40 பேர் நான்கு குழுக்களாக பிரிந்து 234 தொகுதிகளிலும், நாடாளுமன்ற பூத் பொறுப்பாளர்களை சந்தித்துள்ளனர்.கடந்தஜூலை மாதம் தமிழகம் வந்த பாஜக தலைவர் அமித்ஷா மக்களை தேசிய ஜனநாயக கூட்டணியாக அணுகவோம் எனசொல்லியிருப்பதை பின்பற்ற உள்ளோம்.
ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்ததை அடுத்து அவர்களது கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டதற்கு ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.பாஜகவின் நான்கரை ஆண்டுகள் ஆட்சியில் 22 கோடி மக்கள் பயனடைந்திருக்கின்றனர். மத்திய அரசின் சாதனைகள் மற்றும்ஊழல் இல்லாத நிர்வாகத்தை மக்கள் கணக்கில் கொண்டு, ஊழல் பிறப்பிடமாக இருக்கிற காங்கிரஸ், திமுக கட்சிகளை மக்கள் தமிழகத்தில் இருந்துவேரோடு பிடுங்கி எறிவார்கள் என்ற நம்பிக்கை பாஜகவிற்கு உள்ளது.
அகஸ்டா, வெஸ்ட்லேண்ட் மற்றும் விவி ஐ பி ஹெலிகாப்டர் வாங்கியதில், சோனியாகாந்தி மற்றும் ராகுலுக்குகையூட்டு கொடுத்திருப்பதாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில்அரபு நாட்டு தரகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.2005 லிருந்து 2014 வரை தொட்டதில் எல்லாம் ஊழல் செய்த ஆட்சி ஜக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி.
காங்கிரஸ் காரர்கள் இந்துக்களை அவமதிக்கும் கருத்துக்கள் படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றால் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்கிறார்கள் . ஆனால் சஞ்சய் பானு அவர்கள் எழுதிய விபத்து பிரதமர் என்ற படம் வருவதற்கு காங்கிரஸார் நாடாளுமன்றத்தில் தடை போடுகிறார்கள். இதிலிருந்து அவர்களின் இரட்டை வேடம் வெளிவந்துள்ளது"எனதெரிவித்தார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
