அன்னை தெரசாவின் சேவையை மதத்துடன் ஒப்பிடக் கூடாது - தமிழிசை சௌந்திரராஜன்..!

அன்னை தெரசாவின் சேவையை மதத்துடன் ஒப்பிடக் கூடாது என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியபோது, 'அன்னை தெரசா போல் இந்து மதத்தில் ஒருவரை காட்ட முடியுமா, என கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பதிலடி கொடுத்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், தெரசாவின் சேவையை மதத்துடன் ஒப்பிடக் கூடாது என்று கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
அன்னைதெரசாவிற்கு இணையான ஒருவரை இந்து மதத்தில் காட்ட முடியுமா? என இந்து மத வரலாறு தெரியாமல் பேசும் விசிக தலைவர் திருமா? ஆயிரக்கணக்கானவர்களை காட்டமுடியும். மக்கள்சேவையை மதம் சார்ந்த பணியாக சாயம் பூசும் சாதி தலைவர்.மதவெறித்தீ பரப்பும் சாதி வெறியாளர். பெண்மையை போற்றுவதே இந்து மதம்' என்று கூறியுள்ளார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
