கமல்ஹாசனை தேடி வந்து சந்திக்கும் டெல்லி முதல்வர்!

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சென்னை வருகிறார்.
சென்னையில் குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் அவர் நடிகர் கமல்ஹாசனை சந்தித்துப் பேசவுள்ளார்!
ஊழல், லஞ்சம் இவற்றுக்கு எதிரான கட்சி ஆம் அத்மி. நடிகர் கமலும்
ஊழல், லஞ்சம் இவற்றுக்கு எதிரானவராகவே இருக்கிறார். டிவிட்டரில் தொடர்ந்து, அரசியல் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். அதிமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்றுவருவதாக ஹாசன் வெளிப்படையான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகிறார்.
கேரளத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசையும் அவர் பாராட்டினார். ஓணம் பண்டிகையின்போது கேரள முதல்வர் பினராய் விஜயனையும் சந்தித்தார்.
இதையெல்லாம் வைத்து கமல்ஹாசன் விரைவில் அரசியல் கட்சி துவங்குவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இந்த நிலையில் டெல்லி முதல்வரும் கமல்ஹாசனும் சந்திக்கவுள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது!
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
