கன்னியாகுமரியில் கனமழை! விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு சேவை கட்!!

கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அணைகளில், அருவிகளில் தண்ணீர் பெருகுகிறது. விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். கன்னியாகுமரியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது!
மழையோடு குமரிக் கடலில் அலைகளின் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
இதன் காரணமாக விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது!
இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்!
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
