கதறும் அதிமுக நகரச் செயலாளர்

அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது மைத்துனர் ஆர்.ஜி.குமார் ஆகியோரால் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அதனால் மன்னார்குடி நகரச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன் எனவும் அதிமுகவை சேர்ந்த நகர செயலாளர் மாதவன் என்பவர் தன் சொந்த கட்சி அமைச்சர் மேல் புகார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார்குடியில் திவாகரன் தலைமயில் எம் ஜி ஆரின் 101வது பிறந்தநாள் அப்போது தேரடியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து அங்கு ஏற்றபட்டிருந்த அதிமுக கொடியை இறக்கிவிட்டு அண்ணா படம் போடாத டி.டி.வி. அணியின் கொடியை ஏற்றினார் திவாகரன் மகன் ஜெயானந்த். நேற்று அந்த கொடியை காவல்துறையினரின் உதவியோடு சில அதிமுகவினர் கீழே இறக்கி கிழித்துபோட்டுவிட்டு மீண்டும் அதிமுக கொடியை ஏற்றினர். இந்த சம்பவத்தில் அதிமுக நகர செயலாளர் மாதவன் சரியாக செயல்படவில்லை என அமைச்சர் ஆர்.காமராஜ் தரப்பினர் அவரை மிரட்டி தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அதனால்தான் மாதவன் கட்சியில் இருந்து விலகுவதாகவும் அமைச்சர் தரப்பு மீதும் புகார் கூறுவதாகவும் பேசப்படுகிறது.
மன்னார்குடியில் திவாகரன் தலைமயில் எம் ஜி ஆரின் 101வது பிறந்தநாள் அப்போது தேரடியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து அங்கு ஏற்றபட்டிருந்த அதிமுக கொடியை இறக்கிவிட்டு அண்ணா படம் போடாத டி.டி.வி. அணியின் கொடியை ஏற்றினார் திவாகரன் மகன் ஜெயானந்த். நேற்று அந்த கொடியை காவல்துறையினரின் உதவியோடு சில அதிமுகவினர் கீழே இறக்கி கிழித்துபோட்டுவிட்டு மீண்டும் அதிமுக கொடியை ஏற்றினர். இந்த சம்பவத்தில் அதிமுக நகர செயலாளர் மாதவன் சரியாக செயல்படவில்லை என அமைச்சர் ஆர்.காமராஜ் தரப்பினர் அவரை மிரட்டி தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அதனால்தான் மாதவன் கட்சியில் இருந்து விலகுவதாகவும் அமைச்சர் தரப்பு மீதும் புகார் கூறுவதாகவும் பேசப்படுகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
