Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கண்ணுக்கு தெரியாத வில்லனிடம் சிக்கிய விதார்த்...!

On July 23, 2014
Aal Movie Stills (5)
Share

ராஜ்குமார் குப்தா டைரக்‌ஷன்ல 2008-ல வெளிவந்து வெற்றிபெற்ற ஹிந்திப்படம் தான் ‘ஆமீர்’. இந்தப்படம்தான் இப்போ தமிழ்ல விதார்த் ஹீரோவா நடிக்க ‘ஆள்’ என்கிற பெயர்ல உருவாகியிருக்கு. விதார்த்துக்கு ஜோடியா ஹார்த்திகா அப்படிங்கிற புதுமுகம் ஹீரோயினா அறிமுகமாகிறார். இப்படத்தை இயக்குநர் சுசிகணேசனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ஆனந் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார்.

இதுவரைக்கும் தமிழ்சினிமாவுல கிராமத்துல தெனாவெட்டா கோயில்காளை மாதிரி சுத்திட்டிருந்த விதார்த்துக்கு இந்தப்படத்துல காலேஜ் புரஃபஷரா கோட் ஷூட் மாட்டி விட்ருக்காங்க. எவ்வளவு சந்தோஷமான ஆளாக இருந்தாலும் அவனும் ஒரு மோசமான நாளை சந்தித்தே ஆகவேண்டும். அப்படி ஒரு சோதனையான நாள் விதார்த்துக்கு வருகிறது. அதிலிருந்து விதார்த் எப்படி மீள்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

இதில் என்ன ஸ்பெஷல் என்றால் படத்தில் விதார்த்தும் படம் முழுவதும் அவரை நாயாய் அலையவிடும் வில்லனும் சந்தித்துக்கொள்ளவே மாட்டார்களாம். இதுவரை தமிழ் சினிமாவில் பதிவு செய்யப்படாத சென்னையின் பல பகுதிகளை 'ஆள்' படத்தில் பதிவு செய்துள்ளார்களாம்.

'ஆள்' திரைப்படத்தின் ப்ரத்யேக காட்சி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான பாரதிராஜா, சேரன், பிரபு சாலமன் சுசிகணேசன், சமுத்திரக்கனி, பார்த்திபன், இயக்குனர் பரத் பாலா, 'குக்கூ' இயக்குநர் ராஜுமுருகன், ‘ஈரம்’ அறிவழகன் மற்றும் சிலருக்காக திரையிடப்பட்டது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.