Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கடுமையான மழையினால் 26 பலி: வங்க தேசம்...

On June 13, 2017
uio_3174522f
Share
uio_3174522f வங்கதேசத்தில் கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பலியாகினர். இதுகுறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) வங்கதேச போலீஸார் தரப்பில், "வங்கதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதில் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இதில் ரங்காமத் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மீட்புப் பணி வீரர்கள் உட்பட 21 பேர் பலியாகினர். பந்தர்மன் மாவட்டத்தில் 5 பேர் பலியாகினர்" என்று கூறப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டுள்ள இடங்களில் மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன என்று வங்கதேச தேசிய பேரிடர் துறை தெரிவித்துள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.