ஐய்யையோ நான் பணமே வாங்கல.....கருணாஸ்

நடிகரும், எம்.எல்.ஏ,வுமான கருணாஸ் நேற்று இரவு சென்னையில் பத்திரிக்கையலரை சந்தித்து ஓர் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது:-
கூவத்தூரில் எனது நண்பர் விடுதியில் தான் நான் தங்கி இருந்தேன்.ஏதாவது கூட்டம் என்றால் தான் அவர்களோடு கலந்து கொள்வேன்.எனவும் அந்த அறிக்கையில் கூறினார்.மேலும் அமைச்சர்களிடம் எனது தொகுதிக்கு நிதி ஒதுக்குங்கள்,கண்மாய் தூர்வாரப்பட வேண்டும், அதற்கு கூடுதலாக நிதி தாருங்கள்.எனது தொகுதியில் மிக முக்கியமான பிரச்சனை தண்ணீர் தான்,அனைவர்ருகும் குடிக்க தண்ணீர் கிடைக்குமாறு உதவுங்கள் என்று கேட்டிருக்கிறோம்.
தவிர,எனது தேவைக்காகவோ,எனது அமைப்பினரின் தேவைக்வோகாகவோ நான் பணம் கேட்டதும் இல்லை, வாங்கியதும் இல்லை
நான் எந்த அணிக்கும் தாவவில்லை. அந்த என்னம் எதுவும் எனக்கில்லை அப்படி இருக்க அபாண்டமான பொய்யை தமிழகத்தில் விவாத பொருளாக ஆக்கி இருக்கிறார், எம்.எல்.ஏ,சரவணன்
எனது விசுவாசத்திற்கும், எனது நேர்மைக்கும், நன்றி உணர்வுக்கும் எதிரான ஒரு அப்பட்டமான பொய்யை கூறியிருக்கிறார், சரவணன்.தன் மீது பொய்யான அறிக்கையை வெளியிட்ட எம்.எல்.ஏ சரவணன் மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன். என்றும் இதுகுறித்து காவல்துறையிடம் முறையிடுவேன் என்றும் நான் அம்மாவின் விசுவாசி இந்தநிலையில் இருந்து என்றும் மாறமாட்டேன்.
இவ்வாறு நடிகர் கருணாஸ் அறிக்கையில் வெளியிட்டுள்ளர்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postடிக்கெட் படத்தின் டிரைலர்....
