Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஓராண்டு ஓய்வுக்கு பின்னர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட திமுக தலைவர்!

On October 30, 2017
vikram
Share
 , vikram உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதி எந்த நிகழ்ச்சியும் பங்கேற்காமல் இருந்து வந்தார். கடந்த வாரம் திடீரென சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்துக்கு கருணாநிதி வந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை அவர் பார்வையிட்டார். கருணாநிதியின் திடீர் வருகை திமுக தொண்டர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது. karunanidhi இந்த நிலையில், மு.க.முத்து மகள் வழி பேரனும் கருணாநிதியின் கொள்ளுப்பேரனுமான மனுரஞ்சித்துக்கும் நடிகர் விக்ரம் மகள் அக் ஷிதாவுக்கும் திருமணம் சென்னை கோபாலபுரத்தில் இன்று நடைபெற்றது. இந்த திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி நடத்தி வைத்தார். consent மணமக்கள் இருவரும் கருணாநிதியின் காலில் விழுந்து ஆசிப் பெற்றனர். திருமணத்திற்கு வந்திருந்தவர்களை கருணாநிதி பார்த்து கையசைத்து வரவேற்றார். ஓராண்டு ஓய்வுக்கு பின்னர் நிகழ்ச்சியில் கருணாநிதி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.