ஒரு ரோலுக்காக மொட்டையடித்த ஹீரோயின் !

குட்டிப்புலி, மருது, கொம்பன் ஆகிய படங்களைத் தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் படம் கொடிவீரன். இப்படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் மஹிமா நம்பியார், சனுஷா, பூர்ணா, பால சரவணன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில் சசிகுமாருக்கு வில்லனாக நடிகர் பசுபதி நடிக்கிறார். மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்துக்காக நடிகை பூர்ணா மொட்டை அடித்துள்ளார்.
இது குறித்து படக்குழு கூறியதாவது:-
இந்த படத்தில் பூர்ணாவின் ரோல் மிகவும் முக்கியமானது. அது வில்லி ரோலா என்பதை பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. கொடிவீரன் படத்தின் கதைப்படி மொட்டையடித்த பின் வளர்ந்த சிறு முடிகளுடன் பூர்ணா வரவேண்டும். இப்படியொரு ரோலில் நடிக்க அவரிடம் கேட்டதும் உடனே ஓகே சொல்லிவிட்டார். ஒரு ரோலுக்காக ஹீரோயின் முடி எடுப்பது என்பது ஆச்சரியமான விஷயம் தான். பூர்ணாவின் இந்த செயல் எங்களுக்கு வியப்ப்பாக இருந்தது. இப்போது அந்த மொட்டை தலையுடன் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். அவருக்கு இந்தப் படம் திருப்பு முனையாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்க படுகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
