‘ஐ’ படத்துக்காக ‘லிங்கா’வுக்கு கிடைத்த ஒருநாள் லீவு..!

கர்நாடகா மாநிலம் ஷிமோகாவில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த பதினைந்து நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட எண்பது சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது க்ளைமாக்ஸை எட்டியுள்ளது. இந்த நிலையில் வரும் செப்-15ஆம் தேதி ஒரு நாள் மட்டும் படப்பிடிப்புக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
காரணம் அன்றைய தினம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கும் ஷங்கரின் ‘ஐ’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் ரஜினியும் கே.எஸ்.ரவிக்குமாரும் கலந்துகொள்கிறார்கள். இவர்கள் இருவரையும் ஷிமோகா சென்று படப்பிட்ப்பு தளத்திலேயே சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார் ஷங்கர்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postஅப்பா கேரக்டருக்கு மாறினார் வினீத்..!
