ஐ.ஏ.எஸ். அதிகாரி நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாப பலி...

ஹரியானா மாநிலம், சோனிபட்டை சேர்ந்தவர் ஆசிஷ் தாஹியா(30 வயது). அவர் தன்னுடன் படித்த அதிகாரிகளுடன், டெல்லி பெர் சராயில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர்கள் மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது பெண் அதிகாரி ஒருவர் நீச்சல் குளத்தில் தவறி விழுந்துவிட்டார்.
அவரை காப்பாற்ற ஆசிஷ் உள்ளிட்ட அதிகாரிகள் நீச்சல் குளத்தில் குதித்தனர். அந்தப் பெண் அதிகாரி பாதுகாப்புடன் மீட்கப்பட்டார். ஆனால், அவரை காப்பாற்ற குளத்தில் குதித்த ஆசிஷ் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
